எனக்கும், அவங்களுக்கும் ராசியே இல்லை.. விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்! வேதனையுடன் ஜாக்குலின் விடுத்த வேண்டுகோள்!!

எனக்கும், அவங்களுக்கும் ராசியே இல்லை.. விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்! வேதனையுடன் ஜாக்குலின் விடுத்த வேண்டுகோள்!!


jacquline-tweet-about-kutty-ramesh-dead

சமீபகாலமாக கொரோனா, மாரடைப்பு போன்ற பல காரணங்களால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்தாக உயிரிழந்துவரும் சம்பவங்கள் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சீரியல் நடிகர் குட்டி ரமேஷும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ்  சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல பிரபலமான சேனல்களிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது தேன்மொழி பி.ஏ தொடரில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்தார். இந்நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அண்மையில்  திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

jacquline

இது சின்னத்திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தேன்மொழி சீரியல் பிரபலங்கள் பலரும் கண்ணீருடன் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மறைவால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள ஜாக்குலின், அப்பா குட்டி ரமேஷ் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள், தற்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. உங்களை நான் ரொம்ப மிஸ் செய்வேன், எனக்கும் அப்பாகளுக்கும் ராசியே இல்லை என சோகமாக கூறியுள்ளார். மேலும், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் எனவும் மீடியாக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.