இசைஞானிக்கு மாபெரும் விழா- நடிகர் விஷால்; ரசிகர்கள் உற்சாகம்.!

isaigani ilayaraja 75th birthday celepration - actor vishal


isaigani ilayaraja 75th birthday celepration - actor vishal

இசைஞானி இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையில் உச்சம் தொட்டவர் என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் அவருடைய பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்பது தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

isaigani75

இந்நிலையில் ராயல்டி மூலம் வரும் ஒரு சிறு பங்கை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருடைய 75 வது பிறந்தநாளை மிக பிரமாண்டமான முறையில் கொண்டாட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது: மாபெரும் இசைக் கலைஞரை கௌரவிப்பது நமது கடமை. இதை அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒருங்கிணைத்து அவருக்கு விழா எடுப்பது இசைக்கு மகுடம் செலுத்துவது போன்றதாகும். மேலும் இசைஞானி இளையராஜா தனக்கு இசை மூலம் வரும் ராயல்டி தொகையை ஒரு ஒரு சிறு பங்கு தயாரிப்பாளர் சங்க சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.  

isaigani75

மேலும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளது. இதன்மூலம் ஒரு பிரச்னையை முடிவுக்கு வர உள்ளது. இதனால் நலிந்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த தொகை செலவிடப்படும் என்று தெரிவித்தார்.