இதைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ? பாரதிராஜாவின் எதிர்ப்புக்கு இரண்டாம் குத்து இயக்குனர் பதிலடி!

இதைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ? பாரதிராஜாவின் எதிர்ப்புக்கு இரண்டாம் குத்து இயக்குனர் பதிலடி!



irantham-kuthu-director-answered-to-bharathiraja

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’ . இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாகும்.
அடல்ட் காமெடி படமாக உருவாகும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, பார்ப்போரை முகம் சுளிக்க வைத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,சினிமாவில் சாதி ஒழிப்பு, தமிழர் பண்பாடு, பெண் சுதந்திரம், மண்ணின் பெருமை என எத்தனையோ விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.  சினிமா வியாபாரம்தான். ஆனால் தற்போது கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

 இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? என ஆதங்கத்துடன் கூறியிருந்தார். 

இதற்கு பதிலளித்திருக்கும் வகையில் இரண்டாம் குத்து பட இயக்குநர் தனது டுவிட்டரில் டிக் டிக் டிக் பட போஸ்டரை வெளியிட்டு, அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். 1981-ம் ஆண்டு 'டிக் டிக் டிக்' படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்போது கூசிருச்சோ?  என பதிவிட்டுள்ளார்.