
India vs bangaladesh warm up match
உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. தற்போது அணைத்து அணிகள் இடையே பயிற்சி போட்டி நடைபெற்றுவரும் நேரத்தில் கடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து முதலில் பேட் செய்துவரும் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன் மட்டுமே எடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறி வருகின்றனர். விராட்கோலி 12 பந்துகளில் 11 ரன்னும், ரோஹித் சர்மா 27 பந்துகளில் 13 ரன்னும் எடுத்துள்ள நிலையில் விளையாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement