சினிமா

ஆண்மையில்லாத செயல்! 96 படத்தை கடுமையாக தாக்கி பேசிய இளையராஜா!! ஏன் தெரியுமா?

Summary:

ilaiyaraja talk harshly about 96 movie

தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 96,  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மேலும் இவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில், கதாநாயகி பாடகி ஜானகியின் ரசிகையாக இருப்பார். மேலும் அவரது பாடல்களையே பாடியும் வருவார். இந்நிலையில் ஹீரோவுக்கு ஹீரோயின் யமுனை ஆற்றிலே பாடலை பாடவேண்டும் என ஆசைப்படுவார். இறுதியில் அந்த பாடலை ஹீரோயின் படுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் 96 திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றதை குறித்து கேட்டபோது, இளையராஜா இது எல்லாம் தவறான செயல், பழைய கால கதை என்பதால் அந்த காலத்தில் உள்ள பாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அந்த காலங்களில் வருவதை போலவே, புதிய பாடல்களையும் உருவாக்கி இருக்கலாம். இது ஆண்மையில்லாத செயல் " என கூறினார்.  இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ilaiyaraja க்கான பட முடிவு

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர்,  இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவதற்கு முன் அவரது அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் 96 படத்தில் பணிபுரிந்த ஒருவர், நான் 96 படத்தில் பணிபுரிந்துள்ளேன். நாங்கள் பயன்படுத்திய ஒவ்வொரு இளையராஜா பாடலுக்கும் அவர் அனுமதியுடன் ராயல்டி கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement