சினிமா

கமல் அரசியலுக்கு வர இந்த பிரபலம்தான் முதல் காரணமாம்! யார் தெரியுமா?

Summary:

Ilaiyaraja is the reason for kamalahasan politics entry

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன் இன்று உலக நாயகனாக இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார் கமலஹாசன். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார்.

நடிப்பையும் தாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலமானார் கமலஹாசன். இந்நிலையில் அதிரடியாக அரசியலில் களம் இறங்கி தமிழ்நாட்டையே கலக்கிவருகிறார் கமலஹாசன். இந்நிலையில் தான் அரசியலுக்கு வர காரணமாக இருந்த ஒரு பிரபலம் பற்றி கூறியுள்ளார் கமலஹாசன்.

இசைஞானி இளையராஜாவை கொண்டாடும் விதமாக இளையராஜா 75 விழா சிறப்பாக நடைபெற்றது. தற்போது அந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. விழா மேடையில் பேசிய கமலஹாசன் தான் அரசியக்குக்கு வர இளையராஜாதான் முக்கிய காரணம், தன்னை அரசியலுக்கு வரச்சொல்லி முதலில் கூறியதே அவர்தான் என்று கூறியுள்ளார் கமலஹாசன்.


Advertisement