தமிழகம் காதல் – உறவுகள்

மனைவியின் கையில் இருந்த டாட்டூ! 6 ஆண்டுகளுக்கு பிறகு காதல்கணவன் செய்த அதிர்ச்சி காரியம்!

Summary:

husband killed wife in chennai

சென்னை புழல் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவீரன். இவரது மனைவி சஜினி. இவர் அழகுக் கலை நிபுணராக உள்ளார். வெற்றிவீரன் கேரளாவை சேர்ந்த சஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவீரன் மற்றும் சஜினி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சஜினி சண்டை போட்டுக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார். 

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தன் இருமகள்களுடன் வசித்து வந்த வெற்றிவீரன் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் சஜினியின் கையில் டாட்டூ போட்டுள்ளார். இதனை கண்ட வெற்றிவீரன் இதுகுறித்து கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் நேற்று மகள்கள் வீட்டில் இல்லாத நிலையிலும் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.மேலும் சண்டை காலைவரை தொடர்ந்த நிலையில் ஆத்திரமடைந்த வெற்றிவீரன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சஜினியின்  கழுத்தை அறுத்துள்ளார். மேலும் பதற்றத்தில் அவரே காவல் நிலையத்திற்கு சென்று தன் மனைவியை கொலை செய்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பின் போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சஜினியின் சடலத்தை மீட்ட போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement