அப்படி இல்லைனா என்னை செருப்பால கூட அடிங்க.! ஆனால்.. வேதனையில் பேசிய ஹாட்ஸ்பாட் பட இயக்குனர்!!

அப்படி இல்லைனா என்னை செருப்பால கூட அடிங்க.! ஆனால்.. வேதனையில் பேசிய ஹாட்ஸ்பாட் பட இயக்குனர்!!


Hotspot director sad speech about people not come to theatre

தமிழ் சினிமாவில் திட்டம் இரண்டு மற்றும் ஜி.வி பிரகாஷின் அடியே போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஹாட்ஸ்பாட். இந்த படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹாட்ஸ்பாட் திரைப்படம் மார்ச் 29 வெளிவந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது படம் குறித்து மோசமாக பலவித சர்ச்சைகள் எழுந்தது. படம் வெளிவந்த பிறகு பாசிட்டிவ்வான விமர்சனத்தையே பெற்றது. ஆனால் தியேட்டரில் பெருமளவில் மக்கள் கூட்டம் வரவில்லை. இந்நிலையில் ரசிகர்களை படத்தை திரையரங்கில் பார்க்க ஊக்குவிக்கும் வகையில் படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

Hotspot

அப்பொழுது பேசிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், இப்போதெல்லாம் பெரிய ஸ்டார்களின் படங்களைத் தவிர சிறுபடங்களுக்கு பெரிதாக வரவேற்பு இருப்பதில்லை. தியேட்டரில் இரண்டு நாட்கள் கூட படம் ஓடுவதில்லை. அதனாலே இந்த படத்தின் மீது கவனத்தை ஏற்படுத்தவே ட்ரெய்லரை அப்படி வெளியிட்டோம். ஆனால், உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரஸ்யமாக சொல்லவே இந்தப் படத்தில் முயற்சித்துள்ளோம். 

இந்தப் படத்தை தியேட்டரில் வந்து பாருங்க. கண்டிப்பாக படம் பிடிக்கும். ஏன் வந்தோம் என ஃபீல் பண்ண மாட்டீங்க. உங்களுக்கு படம் பிடிக்கலைனா என்னை செருப்பால் கூட அடித்துக் கொள்ளலாம். பிறமொழி படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை தமிழ் படங்களுக்கும் கொடுங்கள் என்று வேதனையுடன் பேசியுள்ளார்.