கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பியின் தற்போதைய நிலை என்ன? தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பியின் தற்போதைய நிலை என்ன? தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!


hospital-explain-the-health-condition-of-singer-spb-NXAYQS

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி கோரதாண்டவமாடுகிறது. இத்தகைய கொடிய வைரஸ்க்கு  சாமானிய மக்கள் முதல் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில்  திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் தனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவரே தெரிவித்திருந்தார்.

corono

இந்நிலையில்  அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை எஸ்.பி.பியின்  உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா உறுதி செய்யப்பட்டு  லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. 

அவருக்கு ஆக்சிஜன் அளவு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் எஸ்.பி.பி நலம் பெற வேண்டும் என விரும்பிய மற்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.