சினிமா

சூப்பர் டா தம்பி.. செம்ம ஹேப்பியாக தனுஷை வாழ்த்திய பிரபலம்! அதுவும் யாருனு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என செம பிஸி

தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என செம பிஸியாக உள்ளார். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ம் தேதி  ரிலீசாக உள்ளது.

இதற்கிடையில் தனுஷ் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதமே தனுஷ் அமெரிக்கா சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இத்திரைப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியாகவிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு வாழ்த்து கூறி ரூசோ பிரதர்ஸ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்  சூப்பர் டா தம்பி.. தனுசுடன் பணியாற்றியது மிகவும் உற்சாகமாக உள்ளது. அவரது ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு  வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்


Advertisement