திருடர்களை பிடிக்க முயற்சித்து, 37 வயதில் வீர மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகர்..! Hollywood Actor Johnny Wacter Died 

 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல் நகரை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் (37). இவர் ஹாலிவுட் திரையுலகில் வெளியான ஜெனரல் ஹாஸ்பிடல் நெடுந்தொடரில் நடித்து பிரபலமானார். 

வீட்டில் நுழைந்த திருட்டு கும்பல்

மேலும், யுஎஸ்எஸ் இண்டியானா போல்ஸ்: மென் ஆப் கரேஜ், சைபீரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, நேற்று அவர் தனது வீட்டில் திருடர்கள் கும்பல் நுழைந்ததை கண்டுள்ளார். அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளார். 

இதையும் படிங்க: "தாய் தந்தையே முன்னறி தெய்வம்" - தன்னை ஈன்றெடுத்த தெய்வங்களுடன் தளபதி விஜய்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே.!!

Actor johny wacter

நடிகர் சுட்டுக்கொலை

அச்சமயம் திருட்டு கும்பல் நடத்திய துப்பாக்கிசூட்டில், உடலில் குண்டு பாய்ந்து நடிகர் மரணம் அடைந்தார். நடிகரின் மரணம் குறித்து தகவல் அறிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இவரின் மறைவுக்கு அங்குள்ள திரையுலகினர், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "நான் வெட்கப்படவில்லை. பெருமை அடைகிறேன்" - 2வது பெண் குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவி.!