"தாய் தந்தையே முன்னறி தெய்வம்" - தன்னை ஈன்றெடுத்த தெய்வங்களுடன் தளபதி விஜய்.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே.!!Actor Vijay Pic With Parents 

 

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் அரசியலில் களமிறங்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

actor vijay

2026 அரசியல் பிரவேசம்

ஏற்கனவே தனது விஜய் ரசிகர் மன்றத்தை தமிழக மக்கள் வெற்றிக் கழகம் என மாற்றி, அரசியல் ப்ரவேசத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படப்போவதும் உறுதியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ரீ-ரிலீஸ் செய்யப்படும் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

actor vijay

தாய்-தந்தையுடன் கிளிக்

இந்நிலையில், தளபதி விஜய் தனது தந்தை சந்திரசேகர் - தாய் சோபனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே தந்தை - மகன் இடையே கட்சி பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது விஜய் தாய் - தந்தையுடன் ஒருசேர புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.  

இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!