தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.! 



actor-vijay-with-director-venkat-prabhu-shooting-spot-p

 

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் G.O.A.T (கோட்). ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் இப்படத்தை தயாரித்து வழங்குகிறது. 

கோட் (GOAT) திரைப்படம்

படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..

விஜய் - வெங்கட் பிரபு போட்டோ லீக்

இந்நிலையில், நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் படப்பிடிப்பு தலத்தில் அமர்ந்தவாறு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இருவரும் படப்பிடிப்பு மானிட்டரை பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில், இவர்களுக்கு பின்னால் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, படப்பிடிப்பு தலத்தில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரபல பின்னணி பாடகியின் பயோபிக் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை.!