"நான் வெட்கப்படவில்லை. பெருமை அடைகிறேன்" - 2வது பெண் குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவி.!actress sridevi ashok post her second girl baby

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவரை அதனை தொடர்ந்து சின்னத்திரையில் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி. கல்யாண பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட நெடுந்தொடர்களில் நடித்துள்ளார்.

கர்ப்பமாக நடித்த நடிகை

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் மோதலும் காதலும், பொன்னி உள்ளிட்ட இரண்டு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டிலும் கர்ப்பமாக இருப்பது போன்று நடித்திருந்தார். 

actress sridevi ashok

குழந்தை பிறக்கும் முதல் வாரம் வரை நடித்த நடிகை

தான் கர்ப்பமான முதல் நாளிலிருந்து குழந்தை பிறக்கும் முதல் வாரம் வரை சீரியலில் தொடர்ச்சியாக நடித்த இவர் மோதலும் காதலும் சீரியலில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து மே 23ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இதையும் படிங்க: பிளாக்பஸ்டருக்கு தயாரா? ரீ ரிலீஸாகும் இந்தியன் திரைப்படம்.. இன்று டிரெய்லர் வெளியீடு..!!

பெண் குழந்தையுடன் புகைப்படம் பதிவு

இது குறித்து அவர், "பெண் குழந்தை. நான் என் வடுவை பதக்கமாக அணிகிறேன். இது தோல்வியடைந்ததற்கான அறிகுறி அல்ல. நான் வெட்கப்படவில்லை. பெருமை அடைகிறேன். என் உடல் என்னை வீழ்த்தவில்லை" என்று தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹோம்லி லுக்குக்கு பாய்., கவர்ச்சிக்கு ஹாய்.. கடற்கரையில் கவர்ச்சி காட்டும் மடோனா.! அசத்தல் வீடியோ உள்ளே.!!