திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்!

திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்!


hindi-serial-actress-leena-acharya-dead

பிரபல ஹிந்தி சீரியல் நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்த தகவலறிந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஹிந்தியில் ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை லீனா ஆச்சாரியா. இவர் கடந்த ஒரு ஆண்டாக சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டு, அதற்காக தீவிர  சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 

leena acharya

இந்நிலையில் 30 வயது நிறைந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.