சினிமா

ஊரடங்கால் வருமானமின்றி மனஅழுத்தம்! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல இளம் சீரியல் நடிகை!

Summary:

Hindi serial actress commits suicide

ஹிந்தி சின்னத்திரையில் மேரி துர்கா, லால் இஷக் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரேக்ஷா மேத்தா. இவர் மிகவும் புகழ்பெற்ற க்ரைம் பேட்ரோல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேக்ஷா மேத்தா தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மேலும்  படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் அவர் வருமானமின்றி கடந்த சில நாட்களாகவே பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் வழக்கம்போல தூங்குவதற்காக சென்ற பிரேக்ஷா மறுநாள் விடிந்து நீண்ட நேரமாகியும், வெளியே வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது பிரேக்ஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் அவரை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்,  அங்கு மருத்துவர்கள் பிரேக்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சின்னத்திரை பிரபலங்களுக்கு  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement