சினிமா

இதை செய்தாலே போதும்! கொரோனா குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

Summary:

Harish kalyan post. Corono awarness video

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் மற்றும்  பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.

இத்தகைய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புகள் ரத்து  செய்யப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் ஹரிஷ் கல்யாண், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement