சூர்யா நடிக்க இருந்த படத்தின் இயக்குனர் அதிரடி மாற்றம்.! இதான் காரணமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சூர்யா நடிக்க இருந்த படத்தின் இயக்குனர் அதிரடி மாற்றம்.! இதான் காரணமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!


hari-directing-surya-39-official-announcement

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் பிசியாக உள்ளார் நடிகர் சூர்யா. இந்த படத்தை அடுத்து சூர்யாவின் 39 வது படத்தை இயக்குனர் சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால், சிவா ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்க இருப்பதால் அந்த படத்தில் பிஸியாக உள்ளார்.

இதனால் சிவா - சூர்யா இணைவதாக இருந்த சூர்யாவின் 39 வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதாக சூர்யாவின் 39 வது படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பு நிறுவனம்  இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அருவா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா நடிக்க, இயக்குனர் ஹரி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

surya

ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்கின்றார். இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகி, மற்ற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.