சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

Summary:

Happy-Birthday-A.R.Murugadoss Sir

சர்க்கார் பாடல் ஒன்று நேற்று வெளிவந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களது பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதிலும் விஜயை வைத்து இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்து விஜய் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.  


இவரின் முதல் படம் தல அஜித் அவர்களை வைத்து இயக்கிய தீனா படம் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். இரண்டாவது படம் நடிகர் விஜயகாந்த் அவர்களை வைத்து இயக்கிய ரமணா. இந்த ரமணா படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மறுஆக்கம் செய்துள்ளார். இதுபோன்று மேலும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.


மேலும் இவர்  எஸ்.ஜெ.சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழித் திரைப்படங்கள் இயக்கி வருகிறார்.

 

இவர் கள்ளக்குறிச்சியில் 28 செப்டம்பர் 1977 ல் பிறந்தார்.பிறந்தார். திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் தான் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் ரம்யா. 

 

 


Advertisement