மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் க்யூட் லுக்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இதனால் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பல்வேறு போட்டோசூட்கள் செய்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
இவ்வாறு கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்