ஹன்சிகா திருமணத்தில் இப்படியொரு ட்விஸ்ட்.. அடடே.. யாருமே எதிர்பார்க்கலையே.. உண்மையான கருணை உள்ளம் இதுதான்.! 

ஹன்சிகா திருமணத்தில் இப்படியொரு ட்விஸ்ட்.. அடடே.. யாருமே எதிர்பார்க்கலையே.. உண்மையான கருணை உள்ளம் இதுதான்.! 


Hanshika Sent Marriage Invitation for Children Whom Living without Parents

 

தமிழில் மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக அறிமுகமாகி, தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இவர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, வேலாயுதம், அரண்மனை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டிகளாகவே தமிழில் பெரியளவில் நடிக்காத ஹன்ஷிகா, ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். மேலும், பல ஆதரவற்ற குழந்தை இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு உதவி செய்து வந்தார். 

Hanshika Motwani

இந்நிலையில், ஹன்ஷிகா தனது காதலர் சோஹைலுடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருக்கும் ஆதரவற்ற & ஏழை குழந்தைகளுக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழை அனுப்பி இருக்கிறார். இந்த விஷயம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றுள்ளது. 

திரையுலகை சேர்ந்தோரும், அரசியல் பிரமுகர்களும், செல்வந்தர்களும் தங்களின் திருமணத்தை தடபுடலாக நடத்த அவர்கள் தரத்திற்கு உள்ளோரை நேரில் அழைப்பார்கள். ஆனால், நடிகை ஹன்ஷிகாவோ தனது மனமும் வெண்மை என்பதை காண்பிக்கும் பொருட்டு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு நேரில் அழைத்து வரவேற்பை பெற்றுள்ளது.