சினிமா

என்கிட்ட இருந்து எந்த செய்தி வந்தாலும் நம்பிடாதீங்க! எல்லாம் போச்சு! புலம்பும் ஹன்ஷிகா!

Summary:

Hanshika reply to leaked pictures

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார்.

மாப்பிளை படத்தை தொடர்ந்து வேலாயுதம், ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், போகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா.

இனி கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், நல்ல
கதையுள்ள படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மியாமி பீச்சில் நடிகை ஹன்ஷிகாவின் பிகினி புகைப்படம் என சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் தனது டிவிட்டர் மற்றும் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம், விரைவில் சரி செய்யப்படும். ஆனால் இதற்கு நடுவில் ஏதாவது தகவல்கள் என் எண்ணில் இருந்து வந்தால் பதில் அளிக்காதீர்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.


 


Advertisement