சினிமா

உடல் எடையை குறைத்து குட்டியான கவர்ச்சி உடையில் நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ!

Summary:

Hanshika mothwani latest slim look photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் எடை குறைந்த ஹன்சிகாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது? இப்படி மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement