"அடி தூள்..." GV பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சி.. கோயம்புத்தூர் உற்சாக வரவேற்பு .... ட்விட்டரில் வைரலான வீடியோ.!gv-prakashumar-live-music-show-gets-a-great-reception-f

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர்  இசை புயல் ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகன் ஆவார்.

 இவர் இசையமைத்த சூழலை போற்று என்று திரைப்படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது. ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன்  மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களில் இவரது பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.

gvprakashkumar

சமீபகாலமாக இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும்  கதாநாயகனாகவும் பல்வேறு பரிணாமங்களில் தனது திறமைகளை மேம்படுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இந்நிலையில் இவரது முதல்  இசை நிகழ்ச்சி  கோயமுத்தூரில் வைத்து நடைபெற்றது.

gvprakashkumar

பிரபலமான இசைக் கலைஞர்களும் தங்களது நேரடி நிகழ்ச்சிகளை  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இசையமைப்பாளர்கள் ஏ. ஆர் ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து ஜிவி பிரகாஷும்  தனது நேரடி இசை நிகழ்ச்சியை முதன்முதலாக கோயமுத்தூரில் நடத்தி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 40000 அதிகமான ரசிகர்கள் கலந்து கொண்டு  அவரது நிகழ்ச்சிக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பாக தனது மகிழ்ச்சியினை ட்விட்டர் சமூக வலைதளத்தின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் அவர். அந்தப் பதிவில் நிகழ்ச்சிக்கான வீடியோ ஒன்றையும் இணைத்து இருக்கிறார்.