சினிமா

ஹாலிவுட்டில் கெத்துக் காட்டும் ஜிவி பிரகாஷ்! அடுத்த அசத்தலான அறிவிப்பால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

Summary:

Gv prakash announcement about hollywood music album release

திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஏராளமான ரசிகர்களை பெற்று பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜி. வி பிரகாஷ். அதனைத்தொடர்ந்து டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய அவர் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அவரது கைவசம் ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, பேச்சுலர் என  பல படங்கள் உள்ளது. ஹாலிவுட்டில் ட்ராப் சிட்டி என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை உருவாகியுள்ளார். கோல்ட் நைட்ஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு  ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஹை அண்ட் ட்ரை ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல்.

இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். மேலும் இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட்  இரண்டையும் ஜிவி பிரகாஷ் செய்துள்ளார்.  இந்நிலையில் கோல்ட் நைட்ஸ்  ஆல்பத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement