பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்-சோகத்தில் திரையுலகம்!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.
ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.
பெங்களூர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு,கன்னட திரை நட்சத்திரங்கள், இலக்கிய ஆளுமைகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.