இப்படி ஒரு அப்பாவியான நல்லுள்ளம் கொண்டவரா இவர்?.. பிரபல வில்லன் நடிகர் குறித்து அசத்தல் தகவல்.!



Graze Karunas about his Friend Actor Maim Gopi 

 

120 மைம் கலைஞர்களை கொண்டு, பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றை நடிகரை மைம் கோபி தற்போது சென்னையில் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக கிடைக்கும் தொகைகளை வைத்து, 25 பெண் குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவ, அவர் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

சமூக அக்கறையுடன், பலருக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து வரும் நடிகர் மைம் கோபி எடுத்த முயற்சியை நேரில் வந்து பாராட்டிய நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ் கருணாஸ், தனது மனதில் உள்ளதை பகிர்ந்துகொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மைம் கோபியும் - நானும் நீண்டகால நண்பர்கள். நான் கல்லூரியில் இருந்தே அவரின் மைமுக்கு நான் ரசிகை. அவர் கற்றுக்கொடுக்க நாங்கள் அன்று நடிக்கவும் செய்தோம். 

எப்போதும் யாவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட கோபி, நல்ல உள்ளம் படைத்தவர். அவரிடம் உங்களால் இயன்ற பணமோ, பரிசோ கொடுத்தால், அதனை இல்லாதவர்களுக்கு கொடுத்துவிட்டு வருவார்" என தெரிவித்தார்.