ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ஒரே ஒரு செல்போன், ஒரே ஒரு ஹெட் செட்..! வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போன ஜி.பி.முத்து.! அடுத்து சினிமா தான்.!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வரும் இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். டிக்டாக் வீடியோக்களால் பலரை ரசிக்க வைத்த இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்தநிலையில் இவரை டிக் டாக்கில் அதிகப்படியான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இதற்க்கு முக்கிய காரணம் தென் மாவட்டத்திற்கு உரித்தான எதார்த்தமான தமிழ் பேச்சு என்றே கூறலாம். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர்.
இவரும் ரவுடி பேபி சூர்யா என்பவரும் டிக்டாக்கில் இணைந்து போட்ட கூத்துக்கள் ஏராளம். இவர் அடிக்கடி கூறும் "செத்த பயலுகளா" என்ற வார்த்தை தான் மிகவும் பிரபலமானது. ஒரே ஒரு செல்போன் மற்றும் ஒரு ஹெட்செட் மட்டுமே வைத்து இணையத்தில் வைரலாகி வந்த ஜிபி.முத்து தற்போது பிரபல தொலைக்காட்சியிலும் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு பல எதிரான கமெண்டுகள் வந்தாலும், தலைவா நீங்க சினிமாவிற்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.