இயக்குனர் கௌதம் மேனனின் அப்பா நடித்த ஒரே படம்.! அதுவும் யார் ஹீரோ பார்த்தீங்களா.!

இயக்குனர் கௌதம் மேனனின் அப்பா நடித்த ஒரே படம்.! அதுவும் யார் ஹீரோ பார்த்தீங்களா.!


gowtham-menon-father-acted-in-vettaiyadu-vilaiyadu-movi

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவன். இவர் 2001 ஆம் ஆண்டு மாதவன், அப்பாஸ், ரீமா சென் நடிப்பில் வெளிவந்த மின்னலே படத்தை இயக்கியதன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கினார். முதல் படத்திலேயே இவர் பெருமளவில் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து கௌதம் மேனன் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு,  வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல மாஸ் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் கமல், ஜோதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. க்ரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.

Vettaiyadu vilaiyadu

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் தனது தந்தை வாசுதேவ மேனனை ஒரு சீனில் நடிக்க வைத்துள்ளாராம். கௌதம் மேனனின் தந்தை தீவிர கமல் ரசிகராம். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் 'கற்க கற்க’ பாடலில் ஒரு சீனில் பாருக்குள் நுழைந்து கமல் ஒவ்வொருவரையும் சுட்டு தள்ளும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த் ஷாட்டில் கௌதம் மேனன் தனது தந்தையை நடிக்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.