சினிமா வீடியோ

மலேசியாவில் முகேனுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த சிறுமி.! இணையத்தையே கலக்கும் அசத்தல் வீடியோ!!

Summary:

Gitl sing mugen song in malasia

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தநிலையில் மலேசியாவை சேர்ந்த பாப் பாடகரான முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.

இவர் ஏராளமான ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடன் பழகி வந்தார். மேலும் ஆடல், பாடல் கைவினைப் பொருட்கள் செய்வது என எப்பொழுதும் கலகலப்பாக இருப்பார். 

மேலும் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து அன்பிற்கு ஏங்கிய முகேன் அன்பு மட்டுமே அனாதை என்று கமலிடம் கூறியது பெருமளவில் வைரலானது.மேலும் சமீபத்தில் அவர் பாடிய சத்தியமா.. பாடலும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க துவங்கியது. மேலும் அவருக்கு என ஏராளமான ரசிகர் பட்டாளமும், ஆர்மியும் உருவானது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகேன் தனது நாடான மலேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரசிகர்கள் கோலாகல வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமி ஒருவர் முகேன் பாடிய பாடலை பாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


Advertisement