எல்லாம் உங்களால்தான்.. தீ விபத்தில் சிக்கிய பெண்ணின் தற்போதைய நிலை! நெகிழ்ந்துபோன நடிகர் கார்த்தி!!girl-meet-karthi-who-studied-under-agaram-foundation

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் அகரம் பவுண்டேஷன் மூலம் பல ஏழை மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு  தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் நன்கு படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அந்த பெண் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டநிலையில், அதனை தெரிந்துகொண்ட சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் மாணவி படிப்பதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு,  சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.

agaram

தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில்அண்மையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி பங்கேற்றார். அவரை அந்த பெண்தான் வரவேற்றுள்ளார். மேலும் தான் அகரம் அறக்கட்டளை மூலம் படித்த பெண் என கூறியுள்ளார். இதனை கேட்டு நெகிழ்ந்துபோய் கார்த்தி அவரை பாராட்டினார்.