யாரும் பார்த்திடாத கேபியின் சிறுவயது புகைப்படம்.. எவ்வுளவு கியூட்டா இருக்காங்க பாருங்களேன்.. அசத்தல் கிளிக்ஸ்.!Gabriella Chariton Old Vintage Clicks now Out

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டு, வெற்றிவாகை சூடியவர் கேப்ரியல்லா சார்ல்டன். இவர் அதனைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 திரைப்படத்தில், நாயகி சுருதி ஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியல்லா, 2013ல் சென்னையில் ஒருநாள் திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

Gabriella Chariton

இறுதியாக 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 2016ல் சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்தில் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2ம் சீசன் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கியபோது உடல் எடை குறைந்து ஒல்லியான தேகத்துடன் இருந்தார். அப்போது, பலரால் நான் ஒல்லியாக இருப்பது குறித்து கலாய்க்கப்பட்டதாக மனவருத்தம் அடைந்தார். தற்போது அவர் நல்ல உடல் அழகை பெற்றுள்ள நிலையில், அவரின் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை கேபியின் ரசிகர் நிர்வகிக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.