அதிரடி லுக்கில் இறங்கிய பாடகி கெனிஷா பிரான்சிஸ்! இணையத்தில் வைரலாகும் புதிய ஆல்பம் !
பிப்ரவரி 9ல் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன?.. விபரம் இதோ.!

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள், நடப்பு வாரத்தில் ஓடிடியில் வெளியாகவிருகின்றன. தமிழ் மொழியில் வெளியான படங்களில் 2 படங்கள் ஓடிடிக்கு வருகை தரவுள்ளன.
அயலான்: இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் சன் என்எக்ஸ்டி தலத்தில் இன்று வெளியாகிறது.
கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், நடிகர்கள் தனுஷ் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 09 அன்று வெளியாகிறது.