இப்படியெல்லாமா அடமானம் வைப்பாங்க.. வாங்கிய கடனுக்காக இரக்கமேயின்றி தந்தை செய்த காரியம்! கொந்தளித்த தாய்!!

இப்படியெல்லாமா அடமானம் வைப்பாங்க.. வாங்கிய கடனுக்காக இரக்கமேயின்றி தந்தை செய்த காரியம்! கொந்தளித்த தாய்!!



father-mortgage-son-to-lender

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சரண்யா. இவருக்கு பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ரூபேஷ் என்ற 13 வயது மகனும், ஹர்சிதா என்ற 11 வயது மகளும் உள்ளனர். ரமேஷ் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாகவே வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ரமேஷ் தனது மனைவிக்கு அவரது தந்தை போட்ட 90 பவுன் நகைகளை விற்று தொழில் நடத்தி வந்துள்ளார். மேலும் கடன் வாங்கியும் தொழில் நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொடர்ந்து ரமேஷை தொந்தரவு செய்து வந்துள்ளனர். கடனை அடைக்க முடியாத நிலையில் ரமேஷ் தனது மகன் ரூபேஷை தொடர்ந்து நாள் முழுக்க கடன் பெற்றவர்களிடம் அடமானம் வைத்து வந்துள்ளார்.

Mortgage

இதனால் ரமேஷ் மற்றும் சரண்யாவிற்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சரண்யா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சரண்யா தனது மகனுடன் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சரண்யா, கடனுக்காக தனது மகனை அடமானம் வைத்த கணவர் ரமேஷ் மீதும் மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.