அடேங்கப்பா! சமந்தாவா இது? வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் வாயடைத்துபோன ரசிகர்கள்.!

அடேங்கப்பா! சமந்தாவா இது? வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் வாயடைத்துபோன ரசிகர்கள்.!


fans-shocked-to-see-samantha-fitness-photo

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்  பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது  முன்னணி நடிகையாக உள்ளார்.மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

 இந்நிலையில் சமந்தா கடந்த ஆண்டு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மேலும் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம்  சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை சமந்தா  எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள கூடியவர். மேலும் அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். இவ்வாறு அவர் ஜிம்மில் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரையும் ஊக்குவிப்பார்.

இந்நிலையில் தற்போது சமந்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா  இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி மட்டும் தலைகீழாக நிற்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.