சீமராஜா படத்தின் முதல் நாள் வசூலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த நடிகர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது வளர்ந்துவரும் பிரபல நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தனது நடிப்பால் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார்.
மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மிக பெரிய வெற்றியை தந்துள்ளது. அந்த சூழ்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சீமராஜா என்னும் படம் உருவானது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.
இந்த சீமராஜா என்னும் படம் இயக்குனர் பொன்ராம், சிவகாா்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணியில் அமைந்த மூன்றாவது படம் ஆகும். மேலும் இந்த படத்தில் நடிகை சமந்தா அவர்கள் சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை சிம்ரன் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், சூரி, யோகி பாபு மற்றும் மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
நடிகர் சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவான இந்த படம் முதல் நாளே சுமார்
ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த படம் மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.