சினிமா

அடக்கொடுமையே.! வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

Summary:

வலிமை பட அப்டேட் கேட்டு முருகனிடம் வேண்டுதல் செலுத்திய ரசிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இதில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.

இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பரவிவந்த கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் தடைபட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

ஆனால் எந்த அப்டேட்டும் வெளிவராத நிலையில், தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

    


Advertisement