அடஅட.. இது வேற லெவல் அரபிக்குத்து! அச்சு அசல் அப்படியே இருக்கே! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

அடஅட.. இது வேற லெவல் அரபிக்குத்து! அச்சு அசல் அப்படியே இருக்கே! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!



Fans dance to arapikuthu song

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.  இந்த படத்தில் கதாநாயகியாக, தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். 

பீஸ்ட் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அரபிக்குத்து பாடல் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

இந்த நிலையில் தற்போது அரபி குத்துப் பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியதை போலவே அச்சு அசல் அப்படியே நடனமாடி ரசிகர்கள் ரீ-கிரியேட் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வாயடைக்க வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.