மக்கள் செல்வனே நல்ல முடிவை எடுங்கள்.! என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம்.! விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா.?

மக்கள் செல்வனே நல்ல முடிவை எடுங்கள்.! என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம்.! விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா.?



fans and cine famous request to vijaysethubathi

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிக்கிறார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். 

இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர் அந்த படத்தில். இந்த நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதை கைவிட வேண்டுமென சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. 

இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. ஆனால் சிலதினங்களுக்கு முன்பு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்தபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

vijay sethupathi

இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ???. என கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை என எழுதியுள்ளார்.

அதேபோல், எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளரின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று விஜய்சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். தனது தனிப்பட்ட திறமையால் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய் சேதுபதி அவர்களுக்கு ரசிகர்களிடம் இருந்தே பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.