ப்ளீஸ்..இதுக்கு மேல வேணாம்!! உங்களுக்கு அழகே அதுதான்! குஷ்புவின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

ப்ளீஸ்..இதுக்கு மேல வேணாம்!! உங்களுக்கு அழகே அதுதான்! குஷ்புவின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!


fan-request-to-kushbu-about-weight-loss

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் நடிகை குஷ்பு. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து எக்கசக்கமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவரது பரம ரசிகர்கள் ஒரு காலத்தில் இவருக்கென கோவில் கட்டிய சம்பவமெல்லாம் நடைப்பெற்றுள்ளது.

நடிகை குஷ்பூ நடிகரும், இயக்குனருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குஷ்பு அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையை பல மடங்கு குறைத்து தற்போது செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

 அத்தகைய புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும்நிலையில் ரசிகர்கள் 18 வயது பெண் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குஷ்பு தற்போது ஊதா நிற புடவையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் புகழ்ந்து கருத்துக்களைக் கூறி வந்தாலும், சிலர் இதற்கு மேல் உடல் எடையை குறைக்காதீங்க! நீங்க பப்ளியா இருந்தாதான் அழகு எனவும் கூறி வருகின்றனர்.