உடல்நலக்குறைவால் காலமானார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை: திரையுலகினர் அஞ்சலி.!



Famous Tamil Producer VA Durai Passed Away 

 

தமிழில் பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி போன்ற பல திரைப்படங்களை தயாரித்து வழங்கியவர் வி.ஏ துரை. 

சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் தற்போது வசித்து வருகிறார். 

69 வயதாகும் துரை, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரின் மறைவு திரையுலகினரை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அவரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.