பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

Famous tamil actor cheenu mohan died


famous-tamil-actor-cheenu-mohan-died

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் மரணமாவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

இந்நிலையில் பிரபல தமிழ் குணசித்ர நடிகர் சீனு மோகன் மரணமடைந்துள்ளார். 1980 ஆம் ஆண்டு சிறு சிறு வேடங்களில் படத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகர் சீனு மோகன். அதனை தொடர்ந்து வருஷம் பதினாறு, மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி, தளபதி போன்ற மாபெரும் படங்களில் நாய்துளர் சீனு மோகன்.

cheenu mohan dead news

நீண்ட நாட்கள் படத்தில் நடிக்காமல் இருந்த நடிகர் சீனு மோகன் நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சித்தப்பாவாக நடித்திருப்பார். கடைசியாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சீனு மோகன்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் சீனு மோகன் டிசம்பர் 27 2018 இன்று மரணமடைந்தார்.