அடடே.. 38 வயதில் திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. கணவருடன் போட்டோ வெளியிட்டு குட் நியூஸ்..!
அடடே.. 38 வயதில் திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. கணவருடன் போட்டோ வெளியிட்டு குட் நியூஸ்..!

தமிழில் "மனசெல்லாம்" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லட்சுமன். அதன் பின்னர் இவர் மலையாள சினிமாவிலும் நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான "கோலங்கள்" என்ற தொடர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த தொடரில் நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சந்திரா, தனது நீண்ட நாள் காதலரான டோஸ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமான போது வயது 38 என தகவல் வெளிவந்துள்ளது.
அத்துடன் தற்போது சமூகவலைத்தளத்தில் அசத்தலான தகவல் ஒன்றையும் சந்திராலட்சுமணன் பதிவிட்டுள்ளார். அதன்படி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். மேலும், வளைகாப்பு நடைபெற்ற படங்களையும் பதிவிட்டுள்ளார்.