சினிமா

பிக்பாஸ் மீரா இப்படிப்பட்டவரா? தனக்கு நடந்த மோசமான அநியாயத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்!!

Summary:

famous serial actor talk about meera mithun

 பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் மோகன் வைத்யா குறைவான வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார். 

bigboss meera mithun க்கான பட முடிவு

இந்நிலையில் தற்போது 13 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் ஒருவர் மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இவர் தற்போது பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் மீரா கடந்த வாரம் இயக்குனர் சேரன் குறித்து தவறான அவதூறு  ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.இதனை தொடர்ந்து மீரா மிதுனை குறித்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் அவருடன் நடனமாடிய சைப் அலி கான் பல அதிர்ச்சியிடும் தகவலை கூறியுள்ளார். 

தொடர்புடைய படம்

அவர் கூறியதாவது, மீரா மிதுன் ஒரு சைக்கோ, தற்போது எப்படி  சேரன் மீது குற்றச்சாட்டினை வைத்தாரோ அதேபோல என் மீதும் ஜோடி நிகழ்ச்சியில் பெரும் குற்றசாட்டு வைத்தார், மேலும் அப்பொழுது நான்தான் தவறு செய்துவிட்டேன்  என என்னும் அளவிற்கு அவரது குற்றச்சாட்டு இருந்தது.

மீரா இன்னும் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் கமல் சாரே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.அவ்வாறு வந்து எப்படிடா அந்த பெண்ணுடன் நடனமாடினாய் என்று கட்டாயம் கேட்பார் என்று கூறியுள்ளார். 


Advertisement