கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பிரபல சினிமா இயக்குநர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தை இயக்கினார். சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார்.
கேரள திரையுலகில் வெற்றிபெற்ற பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். கே.ஆர்.சச்சிதானந்தம் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு 8 ஆண்டுகள் வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து பல திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதி வந்த சச்சி, 2019-ல் பிருத்விராஜ் நாயகனாக இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படம் பெரும் வெற்றியை குவித்தது குறிப்பிடத்தக்கது.
சச்சிதானந்தம் மாரடைப்பு காரணமாக திருசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இழப்பு மலையாள சினிமா உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.