பட ரிலீசுக்கு கிழிந்த ஆடைகளை அணிந்துவந்த பிரபல நடிகை! ஷாக் ஆன ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திஷா பதானி. இவர் 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் படங்களில் நடித்து வருகிறார். அவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் சூப்பர் ஹிட்டானது.
சல்மான் கான் நடித்து வரும் பாரத் படத்தில் திஷா பதானி ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்துக்கான ப்ரீமியர் ஷோ இரு நாட்களுக்கு முன், மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்தார் திஷா பதானி.
இந்தி படமான பாரத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும் நடித்திருப்பதால், படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாரத் படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சிக்கு திஷா பதானி, வெள்ளை நிற டாப்பும், ஆங்காங்கே கிழிந்து இருக்கும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து கவர்ச்சியாக வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட திஷா பதானியின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.