லியோ திரைப்படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.. யாரென்று தெரிந்து அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள்.?
நான் இந்த நடிகரை தான் திருமணம் செய்வேன்! பிரபல நடிகையின் ஒபன் டாக்!
நான் இந்த நடிகரை தான் திருமணம் செய்வேன்! பிரபல நடிகையின் ஒபன் டாக்!

நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகை ராஷ்மிகாவிற்கு மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தப்போதிலும் தேதிகள் இல்லாததால் மாஸ்டர் படம் கைநழுவியது. அதன்பின்னர் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆனார்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தெலுங்கு பட விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் எந்த நடிகரை நண்பராக தேர்வு செய்வீர்கள்? எந்த நடிகரை காதலராக தேர்வு செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நடிகர் நிதினை நண்பராகவும், நடிகர் விஜயை காதலராகவும் தேர்வு செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் குறித்து அவர், எனக்கு சிறு வயதிலிருந்தே நடிகர் விஜயை ரொம்ப பிடிக்கும் என்றும், எனக்கு அவர் மீது ஒரு காதல் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.எந்த நடிகர் கணவராக வர வேண்டும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் தான் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.