சினிமா

கேரள வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் மத்தியில் பிரபல நடிகையின் குமுறல்!.

Summary:

கேரள வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் மத்தியில் பிரபல நடிகையின் குமுறல்!.

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கேரள மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பிரபல நடிகை அனன்யாவின் வீடும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்த பதிவிட்ட நடிகை அனன்யா ‘கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை பெரும்பவூரில் உள்ள எங்களது வீடுகளில் பத்திரமாக இருந்து வந்தோம். கடந்த 2 நாட்களாக நிலைமை மோசமானதால். மழை நீரின் மட்டம் அதிகமாகி வீட்டினுள் தண்ணீர் புகுந்துவிட்டது.

எங்களுடைய உறவினர்களும் மழை நீர் புகுந்த வீட்டினுள் தான் இருந்து வந்தனர்.ஆனால், தற்போது பெரும்பவூரில் உள்ள என்னுடைய தோழி ஆஷாவின் வீட்டில் பத்திரமாக இருக்கிறோம் என்றும் எங்களை விட மோசமான நிலையில் பல மக்கள் இருக்கிறார்கள் என்று தெரியும். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி’ என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்..

 


Advertisement