பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
முக்கிய பிரபல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!
முக்கிய பிரபல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!

முக்கிய மூத்த பிரபல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76) இன்று காலமானார்.
பாமா விஜயம், எதிர்நீச்சல், இரு கோடுகள் உள்ளிட்ட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் அதிக அளவில் இடம்பிடித்தார்.
நடிகை ஜெயந்தி தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். அவர் சில ஆண்டுகளாக உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சொந்த மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டில்ஓய்வெடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்துமா பிரச்சனையால் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.