போதையில் தயாரிப்பாளருடன் பிரபல நடிகை செய்த காரியம்! காவல் நிலையத்தில் புகார்!

போதையில் தயாரிப்பாளருடன் பிரபல நடிகை செய்த காரியம்! காவல் நிலையத்தில் புகார்!


Famous actress attacked female producer by beer bottle

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரது அக்கா சஞ்சனா கல்ராணி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது போடா முண்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துவருகிறார் சஞ்சனா.

இந்நிலையில் சஞ்சனா மீது வந்தனா என்னும் பெண் தயாரிப்பாளர் ஒருவர் பரபரப்பு புகார் ஓன்றை காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதில், பெங்களூரில் நடந்த பார்ட்டி ஒன்றில் தானும் , சஞ்சனாவும் கலந்துகொண்டதாகவும், அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதை அடுத்து சஞ்சனா தன்னை பீர் பாட்டிலால் அடித்ததாக வந்தனா அந்த புகாரில் கூறியுள்ளார்.

nikki kalrani

ஆனால், நடிகை சஞ்சனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.பாார்ட்டியில் வந்தனாவுடன் பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான் என்றும், ஆனால் நான் அவரை பீர் பாட்டிலால் தாக்கவில்லை, அப்படி தாக்கியிருந்தால் அவரது தலையில் காயம் இருந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் காயம் இல்லை.

மேலும், அவர் என் குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாகவும், பதிலுக்கு நான் பேசியதால், என்னை கைது செய்ய வைப்பதாக மிரட்டியதோடு, என்னை சிறையில் தள்ளுவதாகவும் மிரட்டினார். எனவே அவர் கூறுவது உண்மை இல்லை என சஞ்சனா விளக்கமளித்துள்ளார்.